சென்னை: நடிகை மீனா தமிழ் சினிமாவில் 90களின் தொடக்கத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல், இவர் குழந்தை நட்சத்திரமாகவும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இவரது கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகை ரம்பா அண்மையில் அளித்த பேட்டியில் மீனா குறித்து பேசியுள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைந்தபோது மீனாவுடன் இருந்து அவரை தேற்றியவர்களில் நடிகை ரம்பாவும் மிகவும் முக்கியமானவர். அதேபோல் நடன இயக்குநர் கலா மாஸ்டரும் மிகவும் முக்கியமானவர் ஆவார். இவர்கள் இருவரும் மீனாவுடன் இருந்து அவரைத் துயரில் இருந்து மீட்டு வந்தார்கள். இப்படியான நிலையில் ரம்பா அளித்துள்ள பேட்டியில் மீனா குறித்து மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
அதாவது, " நடிகை மீனா மிகவும் கடினமாக உழைக்கும் பெண். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டு உள்ளார். அவரது உழைப்பு குறித்து பேசினால் பலருக்கும் அது புரிய வாய்ப்பில்லை. மீனாவின் கணவர் இறந்தபோது நான் அவருடன் இருக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியுள்ளது. அதனால்தான் நான் அங்கு வந்துள்ளேன். இல்லை என்றால் நான் அங்கு எப்படி இருக்க முடியும்?.

மீனா - ரம்பா: மீனாவின் அப்பா முன்பே இறந்துவிட்டார். மீனாவின் அம்மாதான் அவரைப் பார்த்துக் கொண்டார். மீனாவுக்கும் ஒரே பெண் குழந்தைதான். மீனா மிகவும் தைரியமான பெண். அவரது தைரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன். மீனாவின் அம்மாவும் மிகவும் தைரியமானவர். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் பெண்கள் தானே என்று மிகவும் சாதாரணமாக நினைப்பார்கள். ஆனால் அப்படி இருக்க கூடாது. அவர்களுக்கு நாங்கள் அனைவரும் உள்ளோம். அந்த தருணத்தில் நாங்கள் இருந்தது சாகருக்கு நாங்கள் செய்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன்.
எமோஷனல்: மீனா மீது எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. நான் நடித்த முதல் படம் செங்கோட்டை அந்த படத்தில் நான் மீனாவுடன் தான் நடிக்கிறேன். கடவுள் எங்கள் இருவருக்கும் மிகவும் நெருக்கமான உறவை கொடுத்துள்ளார். அதுபோல் நாங்கள் மீனாவுக்காக எப்போதும் இருப்போம். நாங்கள் நெருங்கிய நண்பர்கள் தான் என்பதற்காக அவரை அங்கு அழைப்பது, இங்கு அழைப்பது என்று அவருக்கு நாங்கள் தொல்லை அளிக்க மாட்டோம். அதே நேரத்தில் ஒரு தோழியாக அவருக்கு நான் எப்போது எல்லாம் இருக்க வேண்டுமோ, அப்போது எல்லாம் நான் மீனாவுடன் இருப்பேன். தோழமையில் அந்த இடைவெளி விட வேண்டும். இதுதான் சரியும் கூட" என்று மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
Take a Poll
கலா மாஸ்டர்: மேலும் உடன் இருந்த கலா மாஸ்டர் பேசும்போது, மீனாவின் கணவர் இறந்த போது, அந்த இரவே அங்கு வருகிறேன் என்று ரம்பா போன் செய்து கேட்டதாகவும், மீனாதான் ரம்பாவை தொல்லை செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும் கூறினார். மேலும் மறுநாள் காலையில் முதல் நபராக வந்து கடைசி வரை மீனாவுடன் ரம்பா இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
நடிகை ரம்பா திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார். ரம்பா இந்திரன் பத்மநாதன் தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்கள் சமீபத்தில் கூட நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சென்று சந்தித்திருந்தார்கள். சினிமாவில் மிகவும் சுறுசுறுப்பாக வலம் வந்த ரம்பாவை திருமணம் செய்து வீட்டில் இருக்கச் சொன்னால் இருப்பாரா? இருக்கத்தான் முடியுமா? ரம்பா இயல்பாகவே சுறுப்பானவர். அவரது உடல் மட்டும் இல்லாமல் மூளையும் மிகவும் சுறுசுறுப்பான மூளை. படப்பிடிப்புத் தளத்திலும் அமைதியாக இருக்காமல் எப்போதும் ஏதாவது செய்து கொண்டு இருப்பார் ரம்பா. இதனால் திருமணத்திற்குப் பின்னர் வீட்டில் இருக்கும் சமையலறையை எப்படி உருவாக்குவது என்ற படிப்பினை படித்துள்ளார். அதை தொழிலாகவே செய்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். இது தொடர்பாக அவரே பேசியும் உள்ளார்.
படிப்பு: இது தொடர்பாக கேட்டபோது ரம்பாவை மேடம் எனக் குறிப்பிட்டு நடன இயக்குநர் கலா மாஸ்டர் கேள்வி கேட்டார்.அதற்கு பதில் அளித்த ரம்பா, " எந்த பிசினஸ் வுமனும் தன்னை மேடம் என்று அழைப்பதை எப்போதும் விரும்பமாட்டார்கள். அவர்கள் தங்களை அவர்களது பெயர் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். எனவே என்னை நீங்கள் மேடம் என்று அழைக்கத் தேவையில்லை. ரம்பா என்று அழைத்தாலே போதும் என்று கூறினார்.
மேலும் பேசுகையில், நான் மிகவும் சுறுசுறுப்பான லேடி என்று எனது கணவரே அடிக்கடி கூறுவார். அதே நேரத்தில் உனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருந்தால் தாராளமாக நடி, அதே நேரத்தில் குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், தொழில் மீதும் அக்கறை கொள்ள வேண்டும், உடல் நலன் மீதும் அக்கறை கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் மூன்று குழந்தைகளை பெற்ற பின்னர், நான் அவருக்கு ஒரு நிறைவான குடும்பத்தை அளித்ததாக அவர் உணர்ந்தார். அதன் பின்னர் அவர் என்னை படிக்க வைத்தார். நான் சுமார் இரண்டரை ஆண்டுகள் ஜான் பிச்சடி என்ற இத்தாலிய டிசைனரிடம் கிச்சனை வடிவமைப்பது குறித்து படித்துள்ளேன்.
சமையல் அறையை ஒழுங்கு படுத்துவது: எனக்கு இயல்பாகவே சமையல் அறையை அழகுபடுத்துகிற, முறைப்படுத்துகிற, அங்கு உள்ள இடத்தை சரியாக பயன்படுத்துகிற அறிவும் ஆற்றலும் இருந்தது. நாங்கள் ஒரு முறை வீடு மாறும் போது, அந்த வீட்டின் கிச்சன் டிசைனராக இருந்த ஜான் பிச்சடியின் பிளான் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு அதில் சில மாற்றங்கள் தேவைப்பட்டது. குறிப்பாக எனக்கு சமைக்கும் இடத்திற்கு அருகில் சிங்க் இருந்தால் பிடிக்காது. அது ஒரு மாதிரி மிகவும் நெருக்கடியாக இருக்கும். நான் அது குறித்து கூறும்போது அவருக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது மட்டும் இல்லாமல் நான் எனக்கு கிச்சன் எப்படி வேண்டும் என்று கூறும்போது ஒவ்வொன்றையும் மிகவும் சரியாகவும் தெளிவாகவும் விவரித்தேன். அதனாலே என்னவோ எனக்கு இதில் அதீத ஆர்வம் உள்ளது என்பதை எனது கணவரும் ஜான் பிச்சடியும் எனது புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் நான் இந்த தொழிலில் கால் பதித்தேன்" என்று கூறினார்.
More from Filmibeat
View More
-
தடம் மாறும் தமிழ் சினிமா.. புது விதையை தூவும் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்.. கோலிவுட்டின் நம்பிக்கை
-
மெய்யழகன் இயக்குநருக்கு பிடித்த வெள்ளைக் கார்.. பல மாதங்களாக தேடி வாங்கிக் கொடுத்த சூர்யா.. ஒரே சந்தோஷம்!
-
மயில்சாமி இறந்த பிறகு மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இதுவா?.. என்னங்க இது?.. ரொம்ப கொடுமைங்க
-
ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. வரதட்சணை 1000 பவுன் தங்கமா?.. ரொக்கம் எவ்வளவு தெரியுமா?..பிரபலம் ஷேரிங்ஸ்
-
கமல்ஹாசன் படங்கள் குறித்து தேவயானி புருஷன் என்ன இப்படி சொல்றாரு.. ஆரம்பித்த புது பஞ்சாயத்து!
-
ரஜினிகாந்த்துக்கு இது எத்தனையாவது இன்னிங்ஸ் தெரியுமா? அவர் எப்பவுமே நாட் அவுட் சூப்பர் ஸ்டார்தான்!
-
பிரைட் நடிகரை விடாமல் துரத்தும் பிரம்மாண்ட இயக்குநர்.. மனைவி இந்த பக்கம் வராம இருக்க காரணமே அதுதானா?
-
கலக்கப்போவது யாரு பாலாவின் புதிய அவதாரம்.. ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை
-
Keeno Review: கீனோ விமர்சனம்.. படம் எப்படி இருக்கு? படத்தில் அப்படி என்னதான் இருக்கு?
-
விவாகரத்து ஹீரோ மீது கடுப்பான தயாரிப்பாளர்?.. பல கோடி போட்டு கல்யாணம் பண்ணியும்.. போச்சே?
-
சாயங்காலம் ஆனாலே ஒரே சரக்குதான்.. மார்க்கெட் காலியானதால் மன வேதனையில் பிரியமான நடிகை?
-
நீங்க குறுக்க வராதீங்க.. பயில்வான் ரங்கநாதனுடன் வாக்குவாதம் செய்த 'வாட்டர்மெலான் ஸ்டார்' திவாகர்!